அருணாசலம் இரவீந்திரன். மட்டக்களப்பு: திருமதி சுசீலாதேவி இரவீந்திரன், 35/3, சின்ன உப்போடை வீதி, 2வது பதிப்பு, மே 2012, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
117 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 330., அளவு: 25×19 சமீ.
நூலாசிரியர் மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட கணக்காளராகப் பணியாற்றியவர். இந்நூலில் 30 விடயத் தலைப்புகளின்கீழ் அரசியலமைப்புச் சட்ட ஏற்பாடுகள், செலவினங்கள், பாதிட்டுக்கான வகைப்படுத்தல், பொது மதிப்பீடு, வகைமாற்ற நடைமுறை, முற்பணக்கணக்கு நடவடிக்கைகள், ஆணைச்சீட்டுகள், கட்டு நிதி, நட்டங்கள், பொதுத் திறைசேரி, பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர், கணக்கீட்டு உத்தியோகத்தர், வருமானக் கணக்கீட்டு உத்தியோகத்தர், உள்ளகக் கணக்காய்வு, நிதிக் கடமைகளைக் கையளித்தல், வருமானம் தொடர்பான நடவடிக்கைகள், பொதுக்கணக்குகள் குழு, கணக்காய்வாளர் தலைமையதிபதி, கொடுப்பனவு, படிவங்கள், சான்றிதழ்கள், வங்கி நடவடிக்கைகள், திணைக்களங்களின் புத்தகங்கள், வெளிநாட்டு உதவிகள், பெறுகை நடைமுறைகள், களஞ்சிய நடவடிக்கைகள், அச்சிடுதல், பல்தேர்வு வினா-விடை, சுருக்க வினா-விடை, கட்டமைப்பு வினா-விடை, சிறு குறிப்புகள், கணக்குகள் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 13170).