சீ.எம்.ஏ.அமீன். கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 13: குவிக் கிராப்பிக்ஸ், பிரின்ட், 5-1/20, சுப்பர் மார்க்கெட், கொட்டஹென).
vii, 129 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×13 சமீ., ISBN: 955-95661-2-1.
இந்நூல் இஸ்லாமிய சட்டக்கோப்பின் வழிநின்று அழகியற் கலைகளை ஆராயவில்லை. மாறாக வரலாற்று அடிப்படையில் அழகியற் கலைகளுக்கு முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பையே ஆராய்கின்றது. அழகியற் கலைகள் பற்றிய ஒரு பொதுப் பின்னணியோடு ஆரம்பமாகும் இந்நூலில் அரபெஸ்க், அரபு எழுத்தணிக் கலை, ஓவியக்கலை, இசைக்கலை போன்ற நான்கு முக்கிய கலைகளைப் பற்றிய விபரம் இடம்பெறகின்றது. இவை பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும்; பல்வேறு காலகட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள விதம் பற்றி எடுத்துக்கூறுகின்றது. உலக அழகியற் கலைகளின் வரலாற்றோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. இஸ்லாம் சிற்பக்கலையை முற்றுமுழுதாகத் தடைசெய்துள்ளமையையும் இசை ஓவியம் போன்ற கலைகளின் எல்லைகளை வரையறை செய்துள்ளமையையும் இந்நூல்வழியாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. அழகியல் கலைகள், அரபெஸ்க், அரபு எழுத்தணிக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, நூலட்டவணை, சுட்டி ஆகிய ஏழு தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32592).