ஏ.கே.ஏரம்பமூர்த்தி. மீசாலை: சங்கீதபூஷணம் அ.கி.ஏரம்பமூர்த்தி, பிருந்தாவன், பங்களா வீதி, மீசாலை மேற்கு, 1வது பதிப்பு, 2008. (சாவகச்சேரி: ரம்யன் அச்சகம், வைத்தியசாலை வீதி, மட்டுவில் வடக்கு).
(20), 167 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.
செந்தமிழ்க் கீதமாலை (1964), தெய்வக் கீதமாலை (1970), கீர்த்தன மாலை (1998), மழலைகள் கீதமாலை (2006) ஆகிய தமிழிசைப் பாடல் நூல்களை வழங்கிய சங்கீதபூஷணம் அ.கி.ஏரம்பமூர்த்தி அவர்களின் ஆறாவது பிரசுரமாக இது வெளிவந்துள்ளது. இதிலுள்ள 172 தமிழிசைப் பாடல்களில் பெரும்பான்மையானவை இலங்கையிலும் இந்தியாவிலுமுள்ள ஆலயங்களைக் குறித்துப் பாடப்பெற்றவை. அருளாளர்கள் அருள்நிலைநின்று ஓதிய பாடல்கள் தொடக்கம் இன்று நம்மவர்கள் ஓதி உணரும்வகையில் பல ஆலயங்களையும் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளையும், ஆலயங்கள் அமையப்பெற்ற ஊர்கள் பற்றியும் கீர்த்தனைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார். மீசாலையூரைச் சேர்ந்த சங்கீதபூஷணம், சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர், இசைக்கவிஞர், சித்த வைத்திய சோதிடப் புலமையாளர் திரு அ.கி.ஏரம்பமூர்த்தி, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழிசையாக்கங்கள், சைவக்கதாப்பிரசங்கங்கள், முதலான பல துறைகளிலே விற்பன்னராகத் திகழ்பவர். சமயப்பணியும், இசைப்பணியும் தமிழ்ப்பணியும் செய்து வருபவர். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் எல்:- 10381).