இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு 2: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன கட்டிடம், 9வது மாடி, 21, வொக்ஷால் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).
37 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.
திரு. பி.பி.தேவராஜ் அவர்களின் அமைச்சுக் காலகட்டத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சகம் 1990இல் தொடங்கப்பெற்ற தமிழ் இசை அரங்க நிகழ்ச்சிகளின்போது வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். முதல் மூன்று அரங்குகளிலும் படிக்கப்பெற்ற நான்கு கட்டுரைகள் இதில் காணப்படுகின்றன. தமிழிசை பற்றிய சில சிந்தனைகள் (எஸ்.கே.பரராஜசிங்கம்), பாபநாசம் சிவன் கீர்த்தனைகளும் தமிழிசையும் (சாரதா நம்பிஆரூரன்), தமிழிசையும் நாட்டிய பாரம்பரியமும் (சுபாஷினி பத்மநாதன்), முத்துத் தாண்டவர் கீர்த்தனைகள் (அருந்ததி ஸ்ரீரங்கநாதன்) ஆகிய தலைப்புகளில் இவை இடம்பெறுகின்றன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11233).