உதயகுமார் உமாமகேஸ்வரி. யாழ்ப்பாணம்: செல்வி உதயகுமார் உமாமகேஸ்வரி, பிள்ளையார் கோவிலடி, உடுவில் தெற்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).
xi, 120 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 20.5×14 சமீ.
தஞ்சைச் சகோதரர்களின் கலைப்பணி, பரத நாட்டியக் கச்சேரி முறைமை (தோடயமங்களம், அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், கீர்த்தனம், அஷ்டபதி, ஜவளி, தில்லானா, சுலோகம், கௌத்துவம், மல்லாரு, புஸ்பாஞ்சலி), பரதநாட்டியக் கச்சேரியில் வாசிகா அபிநயத்தின் பங்கு, பரதநாட்டியக் கச்சேரியின்போது நர்த்தகி அறிந்திருக்கவேண்டிய விடயங்கள், பரதநாட்டியக் கச்சேரியில் ஆஹார்ய அபிநயத்தின் பங்கு, ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இன்றைய பரதநாட்டியக் கச்சேரியில் நாம் பயன்படுத்துகின்ற ஒழுங்குமுறையானது இற்றைக்கு 200ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரில் வாழ்ந்த முத்தமிழ் வித்தகர்கள் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வரினதும் முயற்சியால் உருவாக்கப்பட்டது. இவர்களின் இம்முயற்சி பற்றிய வரலாறு இந்நூலின் முதலிரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நூலாசிரியை இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் நான்காண்டுகள் முறைப்படி கற்று, பரதநாட்டிய நுண்கலைமாணிப்பட்டம் பெற்றவர். வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்படும் ஆசிரியர் தரப் பரீட்சையிலும் சித்தி எய்தி நாட்டியகலா வித்தகர் பட்டமும் பெற்றவர். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் எல்:- 9912).