11470 உடல்: உலகத் தமிழ் நாடகவிழா 2016 சிறப்பிதழ்.

சி.ஏ.அருள்நாயகம் (நிர்வாக ஆசிரியர்),எம்.அரியநாயகம் (ஆசிரியர்). பிரான்ஸ்: GIFT, 30, rue de Tourville 93600, Aulnaysous Bois, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பாரிஸ் 75010: Print Express, 41 Rue Louis Blanc).

144 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ.

உலகத் தமிழ் அரங்கையும் அரங்கியலாளர்ளையும் ஒருங்கிணைக்கும் ‘உடல்’ காலாண்டிதழ் தனது வரலாற்றுப் பதிவாக ‘உலகத் தமிழ் நாடகவிழா 2016’ பெருவிழாவை பாரிஸ், மாநகரில் ஆர்ஜெந்தை (Salle Jeanvillar g Bd Heloise, 95100 Argenteuil) நகர மண்டபத்தில் 2016 செப்டெம்பர் 25,26ஆம் திகதிகளில் நடாத்தி முடித்தபின்னர் அந்நிகழ்வு பற்றிய அறிக்கைகளுடன் வெளியிட்டுள்ள அரங்கியல் சிறப்பிதழ் இதுவாகும். பவளவிழாக் கண்ட நம்மவர் ஏ.சீ.தாசீசியஸ் அவர்கள் (முல்லை அமுதன்), தீண்டாமேளம் என்றார்கள் தற்போது தரணி எங்கும் எடுத்துச் செல்கிறோம் (மதுவந்தி), சிற்பியின் நரகம் கவிதாவின் நரகமா? (சஞ்சயன்), உலகத்தமிழ் நாடகவிழா 2016 (அறிக்கை), பத்தண்ணா பற்றிய விருந்துரைகள்(பேராசிரியர் அரசு, ஏ.சீ.தாசீசியஸ்), தருமனும் ஏகலைவனுமாய் (பரராசா), புலம்பெயர்ந்த நாட்டில் நடனம் சார்ந்த எனது பார்வை (இவோன் ரொறிங்ரன்), ஒரு இயக்குநர் உருவாகுகின்றார் (என்.எஸ்.தனபாலசிங்கம்), தமிழ்த் திரைப்பயணத்திற்கு தனிப்பாதை வகுப்போம் (ஈழன் இளங்கோ), வானொலி நாடக நூல்கள்: சில மனப்பதிவுகள் (எஸ்.எழில்வேந்தன்), நான்காம் ஆசிரமம்: ஆர். சூடாமணியின் மூலச்சிறுகதையின் அரங்க வடிவம் (கே.எஸ்.கருணாபிரசாத்), சாதனை படைத்த பாரீஸ் உலகத் தமிழ் நாடக விழா (நயினை விஜயன்), அவுஸ்திரேலிய சிறுவர் அரங்கு (எஸ்.யோகானந்தம்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Kosteloos Slots

Inhoud Slot hot gems | Schenken De Online Casinos Eigenlijk Poen Weg? Gokhuis Spiele Mit Spielgeld Oder Mit Echtgeld Spielen? European Roulette Voordat Mits daar