அரங்காற்றுக் குழு. லண்டன்: அரங்காற்றுக் குழு, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (லண்டன்: வாசன் அச்சகம், மிச்சம்).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
2004 ஜனவரி 17, 18ஆம் திகதிகளில் லண்டனில் இடம்பெற்ற நாடகவிழாவின்போது வழங்கப்பட்ட சிறப்பு மலர். ஆடுகளம், மயான காண்டம்-2, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே ஆகிய மூன்று நாடகங்களின் அரங்கேற்றமும் பாரிஸ் கலைஞர்களின் சாம்சன் வழங்கும் அருந்ததியின் ‘இன்னொரு மனிதன்’ நாடகமும், ரகுநாதன் வழங்கும் தா.பாலகணேசனின் ‘பொற்கூண்டு’ நாடகமும் அன்றைய தினங்களில் இடம்பெற்றிருந்தன. பொதுவான அரங்கியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுடன் மேடையேற்றப்படவுள்ள நாடகங்களின் பின்னணி பற்றியும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதாக இம்மலர் உருவாக்கப்பட்டுள்ளது.