தேவநாயகம் தேவானந்த் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்க இயக்கம், 203/5, கச்சேரி நல்லூர் வீதி, பாணன்குளத்தடி, 1வது பதிப்பு, மார்ச் 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் நிறுவனம், இல. 681, காங்கேசன்துறை வீதி).
x, 228 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 23×18 சமீ., ISBN: 978-955-7664-04-0.
மீண்டும் தொடங்கும் மிடுக்காக நல்லூர் நாடகத் திருவிழா (தே.தேவானந்த்), வரலாற்றுச் சாதனையாக நல்லூர் நாடகத் திருவிழா (தே.தேவானந்த்), செயல்திறன் அரங்க இயக்கத்தின் நல்லூர் நாடகத் திருவிழா புதிய பண்பாட்டு மறுமலர்ச்சிக்கான நகர்வுகள் (மா.சின்னத்தம்பி), நல்லூரில் ஒரு நாடகத் திருவிழா: ஒரு மகிழ்வான அனுபவம் (இ.கிருஷ்ணகுமார்), யாழ்.நகரில் நடந்துமுடிந்த மகத்தான நாடக விழா (சூரியசேகரன்), சமூக அக்கறைகொண்ட ஒரு ரசிகனின் பார்வையில் செயற்திறன் அரங்கச் செயற்பாட்டாளர்களின் நாடகத் திருவிழா (பாலசிங்கம்), புiஎந ர்யிpiநௌள யனெ னநளநசஎந ர்யிpiநௌள (கந்தையா ஸ்ரீகணேசன், எஸ்.காயத்திரி), நல்லூர் நாடகத் திருவிழா- ஆவணி 2015 (பா.செவ்வேள்), என் கலைப் பயணத்தின் பொக்கிஷங்கள் (பார்த்தீபன்), ஏகாந்தம்-ஒரு பார்வை (சிவ. பரமேஸ்வரி), நல்லூர் நாடகத் திருவிழா-ஒரு பார்வை (பரதன்), ஆகிய கட்டுரைகளுடன் நாடக எழுத்துருக்களாக சிரிப்பு மூடை (சிறுவர் நாடகம்), ஏகாந்தம் (வேடமுக நாடகம்), வேடதாரிகள் (நவீன நாடகம்), வெண்மை எழில் (கவிதை நாடகம்), கல்லறைக் கவிதைகள் (கவிதை நாடகம்), ஆகிய ஐந்து நாடகங்களும், பத்திரிகை வெளியீடுகள், வடக்கு மாகாண ஆளுநர் உரை என்பனவும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 250176).