11474 புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்: தமிழ் அரங்கின் புதிய பரிமாணம்.

ஏ.ஜி.யோகராஜா. தமிழ்நாடு: அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1வது பதிப்பு, அக்டோபர் 2014. (தமிழ்நாடு: அகரம், தஞ்சாவூர் 7).

301 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 24×18 சமீ., ISBN: 978-93-80342-702.

போரின் துயரம், தாய்நாடு குறித்த ஏக்கம், புலம்பெயர்ந்த அந்நியச் சூழல், இன மற்றும் கலாச்சார வேறுபாடுகள் முன்வைக்கும் நெருக்கடியான வாழ்வில், உள்ளும் புறமும் சிதைந்துபோன ஒரு சமூகம் தன்னை ஆற்றுப்படுத்த மேற்கொண்ட கலாரீதியான முயற்சிகளே இந்நாடகப் படைப்புகளாகும். இந்நூலில் நாடகப் பிரதிகளை மட்டுமின்றி, மூன்று ஆண்டுகால நாடகப் பயிற்சி நெறிகளையும் மிக நேர்த்தியான மொழிநடையில் யோகராஜா அவர்கள் பதிவுசெய்திருக்கிறார். நாடகம் பற்றிய கற்கை நெறிகளையும். பயிற்சி முறைகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் இக்கட்டுரைத் தொகுப்பு, அரங்கியல் மாணவர்களுக்கான சிறந்ததொரு ஆவணமாக அமைந்துள்ளது. ஏ.சீ.தாசீசியஸ் அவர்கள் ஆசியுரையையும், அன்ரன் பொன்ராஜா அறிமுகவுரையையும், ஜெயரஞ்சனி ஞானதாஸ் முன்னுரையையும், சண்முகராஜா, வேலு சரவணன், பளைராஜன் ஆகியோர் சிறப்புரைகளையும், ஏ.ஜீ.யோகராஜா ஆசிரியருரையையும் மாதவி சிவலீலன் அணிந்துரையையும் வழங்கியுள்ளனர். ஆற்றுகைக்கான எழுத்துருக்கள் என்ற பிரதான பகுதியில், வில்லியம் தெல்-கூத்து நாடகம், காடு-சிறுவர் நாடகம், மதயானையை மடக்கிய சிற்றெறும்பு-சிறுவர் கதா நிகழ்வு, தூர விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்-சிறுவர் கவிதா நிகழ்வு, வெள்ளாடுகளின் தந்திரம்- சிறுவர் நாடகம், கடலம்மா, பனிமுகடுகளின் புதிய சுவடுகள்- மாணவர் நாடகம், மேற்குத் திசையில் சிவப்பு வானம்-மாணவர் நாடகம், பூவிதழ் மேனியர்-இசை நாடகம், மயான காண்டம்-2,  – கொதிநிலை, Mutter Meer (கடலம்மா)- இரு மொழி நாடகம், Wilhelm Tel (வில்லியம் தெல்)- இருமொழி நாடகம், சூரியன் உதிப்பதில்லை ஆகிய 14 எழுத்துருக்களும் இடம்பெற்றுள்ளன. படைப்பாளிகள், ஆற்றுவோர், பார்ப்போர் ஆகியோரின் பார்வையில் அமைந்த யோகராஜா பற்றியும் அவர்தம் பணிகள் பற்றியுமான மனப்பதிவுகள் இந்நூலின் இறுதிப் பகுதியாக இடம்பெற்றுள்ளது. இதில் ஏ.ஜி.யோகராஜா, அ.மங்கை, அழகு குணசீலன், எஸ்.புண்ணியமூல்ர்த்தி (அரிகரபுத்திரன்-சுவிஸ்), இரா.சிவரத்தினம். வா.வி.பாஸ்கர், கே.எம்.ரீ.பாலகுமார், சக ரமணன், செ.மகோற்கடமூர்த்தி, பிரபா-சுதா, நா.கஜேந்திரசர்மா, சாமி சுரேஸ் ஆகியோரின் மனப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்