தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச் செட்டித் தெரு, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 13: சன் பிரின்டெக்).
xiii, 100 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-7252-00-1.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தினக்குரல் வாரமலரிலும் வீரகேசரியின் கலைக்கேசரியிலும் சங்கமத்திலும் வெளிவந்துள்ளன. இலங்கையில் சினிமா அறிமுகம். சிங்களச் சினிமாவின் உதயம், முதலாவதாகத் தயாரிக்கப்பட்டும் நான்காவதாக வெளிவந்த படம், இலங்கைச் சினிமாவில் இந்தியக் கலைஞர்கள், சிங்களச் சினிமாவை வளர்த்த இலங்கைத் தமிழர்கள், இலங்கைச் சினிமாவில் தந்தை-மகன்-பேரன், எழுபதுகளில் இலங்கைச் சினிமா, இலங்கையில் உருவான ஸ்ரூடியோக்கள், இலங்கை சினிமாவை வளர்த்த எம்.மஸ்தானும், ஏ.எஸ்.ஏ.சாமியும், எம்.வி.பாலனும் அன்ரன் கிரகரியும், ஒரே கதை இரண்டு படங்கள், சிங்களப் படங்களில் தமிழ் முஸ்லீம் நடிகைகள் ஆகிய 12 தலைப்புக்களில் இவை ஒழுங்குபடுத்தித் தனி நூலாக அமைக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் த.தேவதாஸ் யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றும் இவர் ஊடகத்துறையிலும் ஈடுபடுபவர்.