செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, மார்கழி 1992. (கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ).
xxxii, 192 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21×14 சமீ.
தமிழ்த் திரைப்படங்களின் அறுபது ஆண்டுக்கால வளர்ச்சியும் பெயர் அகரவரிசையும் இந்நூலின் பிரதான அம்சங்களாகும். அறுபதாண்டுக் காலத்தில் தமிழில் 4000 திரைப்படங்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளனவென்றும் அவற்றுள் வேற்றுமொழிப் படங்கள் 800 உள்ளனவென்றும் வருடாந்தம் 100 நேரடித் தமிழ்ப்படங்கள் சராசரியாக எடுக்கப்பட்டுள்ளனவென்றும் இந்நூலின் வழியாக அறியமுடிகின்றது. இந்நூலின் முதலாவது பகுதி தமிழ்த் திரைப்பட 60அண்டுகால வளர்ச்சி/வெள்ளிவிழாக் காலப் படங்கள்/ஒரே பெயரில் பலதடவை வெளிவந்த படங்கள்/பொன் விழாக்காலப் படங்கள்/வெள்ளியின் முடிவில் பொன்னின் ஆரம்பத்தில்/வைரவிழாக்காலப் படங்கள் என தனித்தனி இயலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் தமிழ்த் திரைப்படங்களின் அகரவரிசை அறையுஞ் செய்தி/ஒரே சொல்லை முதற்பெயராகக் கொண்டு வெளிவந்தவை/தமிழ் இலக்கிய இதிகாச அறிவு வளர்த்த திரைப்படங்கள்/தமிழ்த் திரைப்படங்கள் மக்களுக்குத் தந்த செய்திகள்/தமிழ்த் திரைப்படக் காட்சிகளின் நடிகர் அட்டவணை ஆகிய இயல்களில் விபரங்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13515).