11478 தமிழ்த் திரைப்படக் களஞ்சியம்: தொகுதி பதினொன்று.

செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஆடி 1993. (கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ).

xxxi, 312 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 20×14 சமீ.

தமிழ்த் திரைப்படப் பாடல்கள் (அகப்பாடல்கள்) உள்ளடங்கிய முதலாம் புத்தகம். இதில் 422 பாடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் அறிமுகவுரை, திரைப்படப் பாடல்களில் உள்ள செய்யுள் இலக்கிய மரபுகள், இத்தொகுதியில் இடம்பெற்ற திரைப்படப் பாடல்களின் அகரவரிசை, தொகுதியில் உள்ள அகத்திணை சார்ந்த திரைப்படப் பாடல்கள், 154 திரைப்படங்களில் இடம்பெற்ற திரைப்பாடல்களின் அட்டவணை, திரைப்படக் காட்சிப் படங்களின் அட்டவணை, திரைப்படக் காட்சிப் படங்கள் மூலமாக அறியப்படும் நடிகர்கள் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல்  ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14588).

ஏனைய பதிவுகள்

14368 இந்து நாதம்: 1985. மலர்க் குழு.

கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).(92) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5