ச.சுந்தரதாஸ். சென்னை 600017: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 600021: எம்.கே.கிராப்பிக்ஸ்).
152 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-83869-07-7.
தமிழ்த் திரைப்பட உலகில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த திரைப்பட வில்லன் நடிகர்களான பி.எஸ்.வீரப்பா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.சக்கரபாணி, எஸ்.ஏ.நடராஜன், டி.கே.ராமச்சந்திரன், வி.கே.இராமசாமி, எஸ்.வி.ரங்காராவ், ஓ.ஏ.கே.தேவர், பாலாஜி, எஸ்.வி.ராமதாஸ், மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார், ஸ்ரீகாந்த் ஆகிய 16 பேர்கள் பற்றிய பல்வேறு சுவையான திரையுலகச் செய்திகள் இந்நூலாசிரியரால் புகைப்படங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கலைமகள், ராணி, குங்குமம், சாவி இதழ்களில் எழுதியுள்ள ச.சுந்தரதாஸ் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையில் வெளிவந்த கதம்பம் மாத இதழில் 1975 முதல் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர். தினகரனில் இவர் எழுதிவந்த ‘சுந்தர் பதில்கள்’ பிரபல்யமானவை. தினகரன் பத்திரிகையின் திரைப்படத் துறைச் செய்தியாளராக பத்தாண்டுகள் வரையில் பணியாற்றியவர். தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகிறார்.