பிரைட் புக் சென்டர். கொழும்பு 11: பிரைற் புக் சென்டர், எஸ்.27, 1வது தளம், த.பெ.எண் 162, கொழும்பு மத்திய சந்தை கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xxxii, 136 பக்கம், அட்டவணை, புகைப்படங்கள், விலை: ரூபா 75., அளவு: 21×14.5 சமீ.
கிரிக்கெற் சார்ந்த 146 கேள்விகளும் அதற்கான பதில்களுமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முதல் 32 பக்கமும் புதிய அணித்தலைவராகும் அதிரடி ஆட்டக்காரர் பற்றிய நோக்கு யாது? சனத் ஜெயசூரியாவின் தலைமை பற்றி பழைய தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் கருத்து யாது? முரளிதரனின் பந்துவீச்சு முறையானதா? இலங்கை அணி புத்துயிர்பெறச் செய்யவேண்டியது யாது? இலங்கையின் புதிய பயிற்சியாளர் யார்? போன்ற இன்னோரன்ன கேள்விகளும் அதற்கான பதில்களுமாக உள்ளன. தொடரும் 136 பக்கங்களிலும் 146 கிரிக்கெற் சார்ந்த பொதுவான கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் காணப்படுகின்றன. இந்நூலுக்கான நூலியல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக தலைப்புப் பக்கம் இடம்பெறவில்லை. அதனால் நூலாசிரியர் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பெறமுடியாதுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39654).