P.U.C.பிரியதர்ஷன். பசறை: P.U.C.பிரியதர்ஷன், ஆசிரியர், பதுளை/பசறை தமிழ் மகாவித்தியாலயம், தேசிய பாடசாலை, 1வது பதிப்பு, 2006. (பதுளை: எஸ்.கே.அச்சகம், புவக் கொடமுல்ல).
(17), 143 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 955-98092-0-2.
விளையாட்டின் சிறப்பியல்புகளும் ஆட்டம் ஆடப்படும் முறையும், வொலிபோல் வரலாறு, இலங்கையில் வொலிபோல் ஆகிய அறிமுகப் பக்கங்களின் பின்னர் முதலாம் பகுதியான ‘ஆட்டம்’ தொடர்கின்றது இதில் வசதிகளும் உபகரணங்களும் (விளையாடற் பிரதேசம், வலையும் கம்பங்களும், பந்துகள்), பங்குபற்றுவோர் (அணிகள், அணியினைத் தலைமைதாங்கிச் செல்வோர்), விளையாடல் ஒருங்கமைப்பு (புள்ளி ஒன்றினைப் பெறல், சுற்று ஒன்றில் வெற்றி பெறல், மற்றும் ஆட்டத்தில் வெற்றி பெறல், விளையாட்டின் அமைப்பு, வீரர்களுக்கான பிரதியீடுகள்), விளையாடற் செய்கைகள் (விளையாட்டின் நிலைமைகள், பந்தினை விளையாட்டில் ஈடுபடுத்தல், வலைக்கு அருகில் ஆடப்படும் பந்து, வலைக்கு அருகிலுள்ள வீரர், பணித்தல், தாக்குதல், தடுத்தல்), இடைநிறுத்தல்களும் தாமதங்களும் (முறையான ஆட்ட இடைநிறுத்தல்கள், ஆட்டத்தினை தாமதப்படுத்தல், விசேட ஆட்ட இடைநிறுத்தல்கள், இடைவேளைகள் மற்றும் விளையாடற் பாகங்களின் மாற்றங்கள்), லிபரோ வீரர் (லிபரோவின் கடமைகள், உபகரணங்கள், லிபரோவுடன் தொடர்புடைய விளையாடற் செய்கைகள்), பங்குபற்றுவோரின் நடத்தைகள் (நடத்தைக்குரிய தேவைகள், தவறான நடத்தை மற்றும் அதற்குரிய தண்டனைகள்) என்பன விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் ‘மத்தியஸ்தர்கள், அவர்களின் பொறுப்புகள், மற்றும் உத்தியோகபூர்வ சைகைகள்’ விளக்கப்பட்டுள்ளன. பகுதி மூன்றில் ‘வரைபடங்கள்/ விளக்கப்படங்கள்’ இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44408).