த.ம.தேவேந்திரன். வவுனியா: உடற்கல்வி மன்றம், தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மார்கழி 1997. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேற் லிமிட்டெட், 501/2 காலி வீதி).
(6), 56 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 60., அளவு: 20.5×15 சமீ.
ஆரம்பத்தில் ஆiவெழ நேவ என்று அழைக்கப்பட்ட வொலிபோல் எனப்படும் விளையாட்டு பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூல் வழங்குகின்றது. சர்வதேச விதிமுறைகள், தேசிய சர்வதேச வரலாறு, 10ம் 11ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடவிதானத்துக்கு அமைவான செய்முறை, போதனா முறை என்பன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. 6 அடி உயரத்தில் இரு கம்பங்களுக்கிடையே வலை கட்டப்பட்டு வீரர்களை இரு குழுக்களாகப் பிரித்து வலையின் இருபறமும் அனுப்பிவைத்து, வலைக்கு மேலால் 25-27 அங்குல சுற்றளவும், 21 அவுன்ஸ் நிறையும் கொண்ட பந்தை கைகளால் தட்டி எதிர்ப் பக்கங்களுக்கு அனுப்பக்கூடிய முறையில் இவ்விளையாட்டு இடம்பெறுகின்றது. 50 அடி நீளம், 25 அடி அகலம் கொண்ட மைதானத்தில் இது விளையாடப்பெறும். தமிழில் கரபந்தாட்டம் என மற்றொரு விளையாட்டும் வழக்கில் உள்ளதால் இதனை தமிழிலும் வொலிபோல் என்றே இலங்கையில் குறிப்பிடலாயினர். இந்நூலாசிரியர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உடற்கல்வித் துறை விரிவுரையாளரும், வவுனியா மாவட்ட வலைபந்தாட்டச் சங்கத்தின் தலைவருமாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39066).