த.ம.தேவேந்திரன். வவுனியா: உடற்கல்வி மன்றம், தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, கார்த்திகை 2007. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).
56 பக்கம், விளக்கப் படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
மெய்வல்லுநர் விளையாட்டுக்கள் (Athletics) வரலாற்றை சுருக்கமாகவும், புதிய விதிகளைத் தெளிவாகவும் இந்நூல் வழங்குகின்றது. வலைபந்தாட்ட வீரர்களின் பண்புகள், நுட்பதிட்பங்கள், அவை தொடர்பான குறிப்புகள் என்பவற்றை விளக்கப்படங்களின் உதவியுடன் வழங்குகின்றது. திறன்கள், திறன்களைப் பயிற்றுவித்தல், பயிற்சி, திட்டமிடல், போன்ற விடயங்களும் உதாரணங்களுடன் இந்நூலில் காணமுடிகின்றது. வரலாறு, சர்வதேச விதிகள்; எனப் பல்வேறு விடயங்களை இந்நூல் விளக்குகின்றது. இந்நூலாசிரியர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உடற்கல்வித் துறை விரிவுரையாளரும், வவுனியா மாவட்ட வலைபந்தாட்டச் சங்கத்தின் தலைவருமாவார்.