11485 விசையுறு பந்தினைப்போல்(கட்டுரைகள்).

சி.விமலன். பருத்தித்துறை: சின்னராஜா விமலன், உயில் வெளியீடு, திரவிய பவனம், மனோகரா, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: கலைமகள் ஓப்செட் பிரிண்டர்ஸ்).

108 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-44157-1-3.

அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட விமலன், யாழ். பண்பாட்டு அமைச்சின் விளையாட்டுத்துறை அலுவலக உதவி முகாமையாளராகவும், ஜீவநதி சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், நமது ஈழநாடு பத்திரிகையின் ஒப்புநோக்காளராகவும், பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியவர். இவர் அவ்வப்போது எழுதிய 24 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சிலையும் பிழையும், காலம் தந்த பரிசு, போற்றுதலாய் அமையட்டும் தெரிவுகள், வெற்றிக்கொடி கட்டு, அர்த்தமற்ற அர்ப்பணங்கள், தன்னிலை உணர்ந்தால் முன்னிலை, ஏன் இந்த முரண்பாடு என இன்னோரன்ன தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘நமது ஈழநாடு’ பத்திரிகையில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக எழுதிய விளையாட்டு அரங்கம் என்ற பத்தியில் இடம்பெற்ற கட்டுரைகளில் தேர்ந்த கட்டுரைகள் இவை. சர்வதேச விளையாட்டுத் தொடர்களில் ஏற்பட்ட சர்ச்சைகள், தனிநபர் போட்டியாளர்/விளையாட்டு வீரர் குறித்தும், காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிகளின் சாதக/பாதகங்கள் குறித்தும் எழுதிய கட்டுரைகளே இவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55327).

ஏனைய பதிவுகள்