மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: அகில இலங்கைச் சைவப் புலவர் சங்கம், 125, அரசடி வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, ஜுன் 2002. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
(4), 51 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
அகில இலங்கைச் சைவப் புலவர் சங்க 42ஆவது ஆண்டு (1960-2002) நிறைவு விழா வெளியீடு. இதில் சங்கத்தின் வரலாறும் சைவப் புலவர்களின் அறிமுகமும் 15 இயல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்புரை, செயற்குழு, சைவப்புலவர் சங்க வரலாறு, சைவப் புலவர் அறிமுகம், சங்க அமைப்பு விதிகள், சைவப்புலவர் வகுப்பு, சைவப்புலவர் தேர்வுப் பாடவிதானம், தேர்வு விண்ணப்பப் படிவம், ஆய்வுக் கட்டுரையும் பட்டமளிப்பும், சைவசமய தீட்சை பெறுதல், அங்கத்தவர் விண்ணப்பப் பத்திரம், சைவப்புலவர் தொகை அட்டவணை, புராண படனப் போட்டிப் பெறுபேறுகள், கௌரவப் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றோர், சங்கத்தை வளர்த்த சான்றோர்கள் அகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23767).