ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை 1: முத்தமிழ் நிலையம், 75 வரதா முத்தியப்பன் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1947. (சென்னை: த ரோயல் பிரின்டிங் வேர்க்ஸ்).
48 பக்கம், விலை: 8 அணா, அளவு: 17×12 சமீ.
தமிழர் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய வரலாற்றை இந்நூல் தெளிவுறக் கூறுகின்றது. தோற்றுவாய், சங்க வரலாறு, பழைய வரலாற்றாசிரியர்கள் இருவகையினர், இவ்வகை வரலாறுகள் எகிப்தில் காணப்படுவதற்கும் நமது நாட்டில் காணப்படாமைக்கும் காரணம், சங்ககாலத்தைப் பற்றிய முடிவு, நூல்நிலையங்கள், இந்திய நாட்டில் நூல்நிலையங்கள், தமிழ்நாட்டில் ஆட்சிமுறை சங்க முறையாக இருந்தது, கடல்கோள், தமிழ்ச் சங்கம்-பிராமணர் வாதம், சங்கப் பலகை, பட்டி மண்டபம், தமிழ் வடமொழிவாதம், அகத்தியர், தொல்காப்பியர், சங்க நூல்கள், சில குறிப்புகள் ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1272).