11489 வகவப் பதிவுகள்: வலம்புரி கவிதா வட்டத்தின் நிகழ்வுகளின் சுவடுகள்.

மேமன் கவி, என். நஜ்முல் ஹ{சைன். கொழும்பு 10: வலம்புரி கவிதா வட்டம், 239/2, சித்தராம மாவத்தை, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-3994-00-4.

1981இல் ஆரம்பிக்கப்பட்ட வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் புதிய பாய்ச்சலைத் தோற்றுவித்தது. தான் கடந்து வந்த பாதைகளின் சுவடுகளை ஒரு தொகுப்பாக இந்நூலில் இவ்வமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. இவ்வகவப் பதிவுகளில் கவியரங்களுக்குத் தலைமை தாங்கியோர், சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டோர்,  அரங்குகள், கவியரங்குகளில் கவிதை வாசித்தோர், போன்ற தகவல்களையும் அவற்றுடன் தொடர்புடைய புகைப்படங்களையும் இப்பதிவுகளில் உள்ளடக்கியிருக்கின்றனர். இடைப்பட்ட சில காலத்தில் தம் பணிகளை இடைநிறுத்தியிருந்தபோதிலும் 2013 முதல் மீண்டும் முழு வேகத்துடன் இவ்வமைப்பு இயங்கத் தலைப்பட்டுள்ளது. இந்நூலின் தொகுப்புக் குழுவில் டாக்டர் தாஸிம் அகமது, ஈழகணேஷ், இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியொர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60861).

ஏனைய பதிவுகள்