க.அப்புக்குட்டி, க.முத்தையா, சு.பஞ்சலிங்கம் (செயற்குழு). சுழிபுரம்: குகன் குலச் சங்கம், 1வது பதிப்பு, ஆவணி 1988. (தெல்லிப்பழை: அம்பிகா அச்சகம், குரும்பசிட்டி).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
விஷ்ணு புத்திரர் வெடியரசன் வரலாறு என்ற நூல், மு.சு.சிவப்பிரகாசம் அவர்களால் 1988 இல் எழுதப்பெற்று தொல்புரம், அகில இலங்கை வெடியரசன் கலா மன்றத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழரிடையே காணப்படும் ஒரு சமுதாயப் பிரிவினரான முற்குகரிடையே வழங்கி வரும் நாட்டார் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்நூல் வெளியீடு ஒரு விழாவாகக் கொண்டாடப்பெற்றது. இந்நிகழ்வினை பண்டிதர் க.சச்சிதானந்தன் தலைமையேற்று நடத்தினார். வெளியீட்டுரையை பேராசிரியர் கா.சிவத்தம்பியும், ஆய்வுரையை கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்களும் ஆற்றினர். இந்நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10342).