இந்திக குடாஹெட்டி (பதிப்பாசிரியர்). என்.ராமலிங்கம், றிஸ்வான் சேகு முகைதீன் (ஆசிரியர் குழு). கொழும்பு 10: லேக் ஹவுஸ் வெளியீடு, அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம், 35, டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 10: அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் ANCL).
200 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21 சமீ.
லேக் ஹவுஸ் குழுமத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறுவர் கலைக்களஞ்சியம் இதுவாகும். அறிவைத் தேடும் முயற்சியில் சிறுவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் கவர்ச்சிகரமான முறையில் அழகிய வர்ணக்கலவையுடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி பத்திரிகை நிறுவனத்தினால் ‘நவயுகய’ என்ற மாதாந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டு வருகின்றது. அப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டு 16 பக்க பின்னிணைப்பாக சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்று தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தது. அந்தப் பதிவுகளே பின்னர்; தொகுக்கப்பெற்று இந்நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளன. அணுக்குண்டு முதல் பன்சன் சுவாலை வரையிலான 68 அத்தியாயங்களில் இக்கலைக்களஞ்சியம் விரிந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58069).