க.வீரகத்தி. கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1971. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை).
(4), iஎ, 92 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18.5×12 சமீ.
பல்லினமான பொருள் தலைப்புகளில் 57 சிறுவர்களுக்கேற்ற பாடல்கள். இவை இறை வணக்கம், தமிழ், பாதிப் பாட்டிலேயே, பாப்பா என்னுயிர், பாலர் ஆடும் பந்து, பூ, வண்டு, வண்ணாத்திப் பூச்சி, ஒளி, வலிவும் வனப்பும், சாய்ந்தாடு பாப்பா, மலையோ மலை, மேகம், மழை, குமிழி, தம்பி, ஆறு, மாம்பழம், பழமும் தமிழும், அம்புலி, வான ஊர்தி அழகைப் பார், புன்னகை வேண்டும், பலூன், பச்சைக்கிளி, மைனா, புள்ளி ஆட்டுக்குட்டி, சிலந்தி, பாவை, நந்தவனத்து நாட்டியம், நுங்கு, தங்கக் கடையல், குழந்தை, கண்மணியே கேள் நீ, பூ-2, குமரலீலை, தொல்காப்பியன், பவணந்தியார், சிவஞான முனிவர், வசந்த காவியம், பங்கய மங்கை, ஈழம் எங்கள் நாடு, எல்லாம் தமிழ், சிலேடை, விதைப்பு, களைகட்டல், அறுவடை, கைத்தொழில், முற்படு புறப்படு செயற்படு, குடிகாரக் குஞ்சித்தம்பி, அப்போலோ 8, ஞானக்கறவை, தைப்பொங்கல், காந்தித் தெய்வம், மாமேதை லெனின், நாவல ஞாயிறு, ஆத்திசூடி ஆகிய தலைப்புகளில் இப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பண்டிதர் க. வீரகத்தி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கரவெட்டி கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபு கவிதைகள் எழுதியவர். தங்கக் கடையல் அவருடைய முதலாவது கவிதை நூல். கணியன் பூங்குன்றனார் செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலமடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் ‘ஓரலகம்’ (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர். தனது வாணி கலைக் கழகம் என்ற கல்விச்சாலை ஊடாக ஏராளமான மாணவர்களுக்கு, தமிழ் இலக்கியமும், இலக்கணமும் போதித்தவர். யாழ்ப்பாண பல்கலைகழக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா இவரது மாணாக்கராவார். 1968ல் திருநெல்வேலி சைவ சித்தந்த கழகம் நடாத்திய திருவள்ளுவர் தினப்போட்டியில் “பரி உரையில் இலக்கணகுறிப்புகள்’ எனும் இவரது கட்டுரை பரிசு பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14336).