கலாபூஷணம் பீ.ரீ.அஸீஸ். கிண்ணியா 7: பாத்திமா றுஸ்தா பதிப்பகம், இல. 46/3, பெரியாற்று முனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கிண்ணியா 4: என்.என்.பிரிண்டர்ஸ், பார்க் வீதி).
28 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-0715-19-0.
சிறுவர் இலக்கியத்துறையில் பல விருதுளை வென்ற இவ்வாசிரியர் சிறுவர்களின் மனோ இயல்புகளை மிகத் தெளிவாக அறிந்து அதற்கேற்ற விதத்தில் பாடல்களை இயற்றியுள்ளார். சிறுவர்களிடம் தன்னம்பிக்கை, துணிச்சல் என்பவற்றை வளர்க்கமுனையும் இவரது பாடல்கள் காலத்தின் தேவையாகும். இத்தொகுதியில் நிலா நிலா வா வா, விளையாடுவோம், மலரும் மொட்டுக்கள், இலங்கைத் திருநாடு, எனக்குச் சொந்தமா?, துணிந்து நில், முயல்குட்டி, ஏளனமாய் நினைத்தது, பாரில் அழிவே மிஞ்சும், துள்ளிக் குதிக்குது, வண்ணத்துப் பூச்சி, புது வரவு, சுத்தம் சுகம் தரும், கொக்கு வெள்ளைக் கொக்கு, குழந்தை எங்கள் செல்வம் ஆகிய 15 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.