11496 பாலர் செந்தமிழ் பாட்டமுதம்.

பா.அமிர்தநாயகம். யாழ்ப்பாணம்: பா.அமிர்தநாயகம், மதிமலர் இல்லம், இல. 15, இராசாவின் தோட்டம் ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 13: ACA Publications, 55 St. Lucia’s Street).

(8), 59 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ.

சிறுவர்களது அறிவு, அனுபவம், சூழல், என்பவற்றுடன் தொடர்புடைய 37 தலைப்புகளில் அமைந்த குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. குருவியும் மானும், காக்காப் பாட்டு, தவளையும் சிறுமியும், காகமும் கோழியும், நிலாவும் சிறுமியும், புள்ளிப் புள்ளி மான்குட்டி, அணிலும் மாங்கனியும், பட்டுவண்ணப் பூச்சி, கோவிலிலே மணியடிக்குது, பள்ளிக்கூடம் போவோம், பாட்டி சொன்ன கதை, எங்கள் வீட்டு நாய்க்குட்டி, கன்றுக்குட்டி சொன்ன கதை, தந்திரமுள்ள முயல், செங்கரும்புப் பொங்கல், காலைக்காட்சி, சிட்டுக்குருவி பறந்து வா, கிளியே கிளியே வந்திடுவாய், கூக்கூக் கூக்கூ குயிலாரே, வல்லவர் செய்திட்ட நல்ல கப்பல், எங்கள் வீட்டுத் தோட்டப் பூக்கள், மீயா மீயா மீயா மீயாவே, மாலை நேரம், குஞ்சம் போட்ட குடை, சிங்கத்தை ஏமாற்றிய முயல், கோச்சுக்குள்ளே கொய்யாப்பழம், தங்கத் தாத்தா, வெள்ளை நிற ஆட்டுக்குட்டி, மணிக்குயிலே மணிக்குயிலே, பட்டணம் கூட்டிப்போ சின்னமாமா, ஆனை தடவிய குருடர், தங்கக் குவியல் உனக்கேது, கொய்யாப்பழம், வேடன் பிடித்து விடுவான், பன்னிரண்டு பாரக்கா, பாட்டியும் வடையும், யாருக்கும் தீங்கு நீ செய்யாதே ஆகிய தலைப்புகளில் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29053).

ஏனைய பதிவுகள்