யோகா. யோகேந்திரன். திருக்கோவில்: திருமதி யோகா. யோகேந்திரன், அதிபர், குமர வித்தியாலயம், திருக்கோவில் கல்விக் கோட்டம், 1வது பதிப்பு, 2003. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செற் அச்சகம்).
48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 50., அளவு: 20.5×14.5 சமீ.
அம்மா என்ற கவிதையுடன் ஆரம்பிக்கும் இக்கவிதைத் தொகுப்பு நாற்பது மணிக் கவிதைகளை உள்ளடக்கி இறைவன் என்னும் கவிதையுடன் முடிவடைகின்றது. மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு, அன்பு, சுகாதாரம், சுத்தம், ஆரோக்கியம் முதலிய பல்வேறு விடயங்களை இக்கவிதைகள் மூலம் ஆசிரியர் மாணவர் மனதில் பதியம் வைக்கின்றார். ஒவ்வொரு கவிதையும் மாணவருக்கு ஏதோ ஒரு செய்தியை பதியவைக்க முயல்கின்றது. சில கவிதைகள் இசையுடன் பாடக்கூடியவாறமைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34233).