ஆரணி (இயற்பெயர்: அ.சிவபாலசுந்தரன்). வவுனியா: தமிழ்க் குடில் வெளியீடு, குருமண்காடு, 1வது பதிப்பு, ஐப்பசி 2011. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).
22 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 19.5×13 சமீ.
அ ஆ இ ஈ, வண்ணக் கனவு, மழைக்காலம், பாபுவின் பச்சைக்கிளி, ஊஞ்சல் ஆடுவோம், தேர்த் திருவிழா, ரயில் வண்டி, கணனி, குட்டிப் பயலே எழுந்தோடு, மழை வருது ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 10 சிறுவர் பாடல்களை இந்நூல் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், தீவகத்தில், சுருவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் சிவபாலசுந்தரன், பாடசாலைக் காலம் முதல் கவிதைத் துறையில் ஈடுபாடுகொண்டவர். இவர் புவியியல் சிறப்புக்கலைமாணிப் பட்டம் பெற்றவர். இலங்கை நிர்வாகசேவை முதலாம் தர அதிகாரியாக செட்டிக்குளத்திலும், பின்னர் பிரதேச செயலாளராக வவுனியாவிலும் பணியாற்றியவர்.