யோ.யோண்சன் ராஜ்குமார். யாழ்ப்பாணம்: திருமதி றுஜந்தா யோன்சண் ராஜ்குமார், முத்தமிழ் மன்றம், திருக்குடும்ப கன்னியர் மடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (யாழ்ப்பாணம்;: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
(3), x, 149 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4833-09-5.
யாழ். திருக்குடும்ப கன்னியர்மட ஆசிரியரும் திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநருமான நூலாசிரியர் எழுதியுள்ள எட்டு சிறுவர் நாடகங்கள் இத்தொகுப்பிலுள்ளன. அமைதிப் பூங்கா, கடமை வீரன், உயிர்களின் நண்பர்கள், ஒற்றுமையே பலம், சிங்கத்தை வென்ற அன்பு, புத்திமான், நீலமலர், ஆமையும் நண்பர்களும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. ஒற்றுமையை வலியுறுத்தல், உயிர்களிடத்தே அன்புகொள்ளல், கடமையைச் சரிவரச் செய்தல், ஏற்றத்தாழ்வின்றி நட்புக் கொள்ளுதல், மன்னித்து வாழுதல், அன்பினால் பகையை வெல்லுதல், ஆபத்தில் அறிவுடன் செயற்படுதல் போன்றதான சிறுவர்களுக்குரிய சிறந்த கருத்தக்களை வெளிப்படத்தம் வகையில் இந்நாடகங்கள் எழுதப்பட்டள்ளன. நாடகங்களுக்கேற்ற ஓவியங்களும் ஆங்காங்கே ஓவியர் டொமினிக் ஜீவாவின் கைவண்ணத்தில் இடம்பெற்றுள்ளன.