மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: செல்லம் அம்பலவாணர், இல. 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2015. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைஸஸ், 63, விகாரை லேன்).
xxiii, 110 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42626-1-4.
சிறுவர்க்கான அரங்க ஆற்றுகையையும், கிராமியக் கலைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட சிறுவர் நாடகங்கள் ஐந்தின் தொகுப்பு இது. சிறுவர்களுக்குப் பரிச்சயமான ‘மூத்தவனுக்கா முதற்கனி’ (பிள்ளையார் மாம்பழம் பெற்ற கதை), ‘காத்தவராயன்’ (காத்தான்கூத்து), ‘தீர்ப்பு’ (குரங்கு அப்பம் பிரித்த கதை), ‘கட்டைவிரல்’ (எகலைவனின் கதை) போன்றவற்றையும் சிறுவர்களுக்கேயுரித்தான பேசும் மிருகங்களைப் பிரதான பாத்திரங்களாகக்கொண்டு இன்றைய காலகட்டத்தில் சிறு வயதிலிருந்து ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டிய இயற்கைச் சமநிலையைக் கருப்பொருளாகக் கொண்ட ‘வாழு வாழவிடு’ என்ற கற்பனைக் கருவுடனான ஆக்கம் ஆகிய ஐந்து சிறுவர் இசை நாடகங்களை இந்நுல் கொண்டுள்ளது. நாடகங்களின் இறுதியில் அந்நாடகம் கூறும் நீதியுரை, எளிமையான வகையில் இரத்தினச் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. காட்சிகளுக்கிடையே நெறியாழ்கை, தயாரிப்பு, காட்சியமைப்பு இன்னோரன்ன குறிப்புகள் தரப்பட்டுள்ளன.