இளங்கம்பன் (தொகுப்பாசிரியர்), குலபதி ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 13: கௌரி பிரின்டர்ஸ், 207, ஆட்டுப்பட்டித் தெரு).
48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30., அளவு: 20×13.5 சமீ.
ஈசாப் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். கி. மு. 600 அளவில் வாழ்ந்தவர். இவர் ஒரு அடிமையாவார். இவர் கூறிய நீதிக்கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் எனப்படுகின்றன. இந்த நீதிக் கதைகள் உலகின் பெருமளவு மொழிகளில் இன்றளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் ஈசாப்பின் நீதிக் கதைகளுட் சில சித்திரங்களுடன் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21659).