ஆறுமுக நாவலர் (மூலம்), சு.செல்லத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
நாவலரின் பாலபாடம் சிறுவர் நூல்களில் இரண்டாம் பாலபாடத்திருலிருந்து 22 கதைகளும் மூன்றாம் பாலபாடத்திலிருந்து ஏழு கதைகளுமாக மொத்தம் 29 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. எப்போது கரை ஏறுவாய், விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை, பெரிய மலையை எடுப்பேன், நீ எப்படிக் கடன் தீர்ப்பாய்? வால் மட்டும் நுழையவில்லை, யோக்கியன் யார்? பாட்டனுக்கு கஞ்சி வார்த்த ஓடு பிதாவுக்கு, ஒரு சூடு போட்டால் ஒருவேளை பிழைப்பான், ஐந்து பணத்தில் வீட்டை நிரப்பவேண்டும், இராமாயணப் பிரசங்கம் ஒரு ஆட்சுமை, உடம்பில் இறகு இல்லையாம் ஆமையில் தானாம், அன்னம் வாயில் நுழைந்தால் குழந்தை பிழைக்குமா? சோடிக் காகங்களைப் பார்த்தவனுக்கு அதிக லாபம், ஐயையோ அங்கே ஆட்கொல்லி, செல்லும் செல்லாததைச் செட்டியாரிடம் கேளுங்கள், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும், எட்டாத பழம் புளிக்கும், கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டு, பல்லக்குத் தூக்குவதுதான் எங்கள் வேலை, ஒனறுபட்டால் உண்டு வாழ்வு, நான் களவெடுத்த இடத்தில் இவனைக் காணவில்லை, மெய்ம்மை, சற்புத்திரர்களே ஆவரணம், புத்தியுள்ள தீர்ப்பு, உண்மையின் பயன், பேராசை பெருந்துயர், செய்ந்நன்றி கொன்றவர் கெடுவர், கல்வியின் பயன், பொய் வேடம் ஆகிய 29 கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.