11508 கடைசிப் பயணச் சீட்டும் வேறு கதைகளும்.

யுனெஸ்கோ (ஆங்கில மூலம்), ந.வாகீசமூர்த்தி (தமிழாக்கம்). பத்தரமுல்ல: யுனெஸ்கோவிற்கான இலங்கைத் தேசிய ஆணைக்குழு, கல்வி உயர்கல்வி அமைச்சு, இசுருபாய, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்).

viii, (5), 147 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-9043-05-6.

இந்நூல் இளைஞர்களுக்கானஆசிய/பசிபிக் இலக்கியத் தொடரில் பகுதி ஒன்றாக வெளியிடப்பட்டது. ஜப்பானில் உள்ள யுனெஸ்கோவிற்கான ஆசிய பண்பாட்டு நிலையம் இளைஞர்களுக்காக வெளியிட்ட The Last Ticket and Other Stories    என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பின் தமிழாக்கமாகும். இந்நூலிலுள்ள 10 கதைகளும் ஆசியாவிலும் பசிபிக் பிரதேசத்திலும் உள்ள 10 நாடுகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதைகளாகும். இத்தொகுப்பில்  காதற் கடிதங்கள் (கேற் வோக்கர்/அவுஸ்திரேலியா), விலோ மரத்தின் இலைகள் உதிர்கின்றன (லொங் சின்ஹீவா/சீனா), பசி பிடித்த செத்தோப்பஸ் (சத்தியஜித் ராய்/இந்தியா), ஈரா பூந்தோட்டக்காரி ஆகிறாள் (ரொயெற்றி மக்ளிஸ்/இந்தோனேசியா), கடைசிப் பயணச்சீட்டு (மினூ கறிம்சாடே/ஈரான்), உள்ளுர்ப் பிரதிநிதி (முகம்மது அலி மஜொத்/மலேசியா), சிறிய செவிகளைக் கொண்ட பெண் செம்மறி ஆடு (சென்டையின் தமின்சுறென்/மொங்கோலியா), வானில் ஒரு பட்டம் (சையத் பற்றா அலி அன்வெரி/பாக்கிஸ்தான்), இம்பொங் செலா (எபிபானியொ ஜீ மற்றியூஸ்/பிலிப்பீன்ஸ்), கீம்-துணிச்சல்மிக்க சிறுவன் (மா வன் காங்/வியட்நாம்) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் கதாசிரியர்களின் பெயரும் அவர்களது நாடும் குறிப்பிடப்பட்டுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24839).

ஏனைய பதிவுகள்