சம்பந்தன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, காங்கேசன்துறை வீதி, 4வது பதிப்பு, 1993, 1வது பதிப்பு, 1949, 2வது பதிப்பு, 1953, 3வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
28 பக்கம், விலை: ரூபா 12., அளவு: 18×12 சமீ.
வரதர் கதை மலர் தொடரில் வெளிவந்துள்ள இரண்டாவது நூல் இது. இந்நூலின் முதல் மூன்று பதிப்புகளையும் யாழ்ப்பாணத்திலிருந்து எஸ்.எஸ்.சண்முகநாதன் அன் சன்ஸ் உரிமையாளர்கள் வெளியிட்டிருந்தனர். இந்நூலில் இராமாயணக் கதையை சிறுவர்களுக்கேற்ற வகையில் ஆசிரியர் மிகத் தெளிவாகத் தயாரித்து வழங்கியிருக்கிறார். இந்நூலின் இறுதியில் (பக்கம் 26-28) எனிற் பிளைற்றனின் ‘முயலாரும் தேநீர்ப் பாத்திரமும்’ என்ற ஆங்கிலக் கதையின் தழுவலாக எழுத்தாளர் சொக்கன் எழுதிய சிறுவர் கதையும் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டு, பத்திரிகைத்தாள் தட்டுப்பாடாகவிருந்த ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இந்நூல் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கேற்ற வகையில் விநியோகிக்கப்பட்டிருந்தது.