11511 உம்பா (சிறுவர் கதை).

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×22 சமீ., ISBN: 978-955-7654-08-9.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 90ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல், எழுத்தாளர் ஓ.கே.குணநாதனின் 32ஆவது சிறுவர் இலக்கியப் படைப்பாகும். குழந்தைக்குப் பால் கொடுக்கும் பசு தாய்க்குச் சமம். எனவே பசுவைக் கொல்வது அம்மாவைக் கொல்வது போலாகும் என்கிறார் ஆசிரியர். தாயைப் போல பசுவையும் பேணவேண்டும் என்னும் எண்ணத்தை பிஞ்சு நெஞ்சில் நடவு செய்ய இக்கதையில் முயன்றுள்ளார்.

ஏனைய பதிவுகள்