நா.மகேசன். கொழும்பு 2: குங்குமம் வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1977. (கொழும்பு 2: குங்குமம் நாதன், அருளொளி அச்சகம்).
52 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்ட நா. மகேசன் சுகாதார அமைச்சில் கணக்காளராகப் பணியாற்றியவர். அவர்; ஒரு மேடை நாடக விற்பன்னராகவும் அறியப்பெற்றவர். பல பயனுள்ள நூல்களைப் படைத்தவர். வானொலி மாமா என அழைக்கப்பெற்றவர். இவரது சிறுவர் குறுநாவல் இதுவாகும். இலங்கையில் மாத நாவல் வெளியீட்டுப் பாணியில் குங்குமம் சிலகாலம் வெளிவந்தது. இவ்விதழில் ஆசிரியர் தலையங்கம், செய்தித்திரட்டு, வரலாறு திரும்புகிறது-சிறுகதை (குறிஞ்சில் த.மனோகரன்), நல்ல தோய்ச்சல்- கவிதை (தி.குகன்) ஆகிய படைப்பாக்கங்களுடன் இச்சிறுவர் நாவலும் பிரசுரமாகியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2102).