குமாரதுங்க முனிதாச (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1972. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை).
xxi, 58 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 3.50, அளவு: 17.5×12 சமீ.
இது ஒரு சிறுவர் இலக்கிய நூல். மெலியார் மிடுக்கு என்ற குமாரதுங்க முனிதாசவின் சிங்கள சிறுவர் கதைநூலை தமிழாக்கம் செய்தளித்த சரோஜினிதேவி அருணாசலம் மொழிபெயர்த்து வழங்கியுள்ள மற்றுமொரு சிறுவர் கதை நூல் இது. செத்துப் பிழைத்த சின்னச்சாமியின் இக்கதை – முதலாம் பிறப்பு, இறக்கும் நாளை அறிதல், முதலாம் மரணம். இரண்டாம் பிறப்பு, இரண்டாம் மரணம், மூன்றாம் பிறப்பு, மூன்றாம் மரணம், நாலாம் பிறப்பு, நாலாம் மரணம், ஐந்தாம் பிறப்பு, ஐந்தாம் மரணம், ஆறாம் பிறப்பு, ஆறாம் மரணம், ஏழாம் பிறப்பு, இறவாதிருக்க யாகம் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8973).