நிஹால் குமார (சிங்கள மூலம்), தேவதாசன் ஜெயசிங் (தமிழாக்கம்). தங்கொட்டுவ: வாசனா வெளியீட்டகம், நாத்தாண்டிய வீதி, 1வது பதிப்பு, 2009. (தங்கொட்டுவ: வாசனா அச்சகம், நாத்தாண்டிய வீதி).
112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 140., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-655-287-4.
சிங்கள மொழியில் மே 2008இல் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் The Avenger Ghost என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், இப்பொழுது 11 அத்தியாயங்கள் கொண்ட இளையோர் நாவலாகத் தமிழாக்கம் கண்டுள்ளது. முன்னதாக இவரது கானகச் சிறுவன் என்ற விறுவிறுப்பான இளையோர் நாவல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49277).