ஜுல் வேர்ன் (ஆங்கில மூலம்), ஐயாத்துரை சாந்தன் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகம் (Alliance Francaisede Jaffna), 83, பலாலி வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி).
iv, 162 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
Voyage au Centre de la Terre என்ற பிரெஞ்சு நாவலின் ஆங்கில வழித் தமிழாக்கம் இது. ஜுல் வேர்ன் (1828-1905) புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். 19ஆம் நூற்றாண்டில் இளைஞர்களுக்கான இலக்கியம் மற்றும் விஞ்ஞானப் புனைகதை இலக்கியங்களுக்கான முன்னோடிகளுள் இவரும் ஒருவர். 1864 இல் எழுதப்பட்ட Voyage au Centre de la Terre (பூமியின் மையத்துக்கான பயணம்) என்ற இந்நாவல் ஓர் இளைஞன் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சோதனைகளினூடு இயற்கையின் மாபெரும் ஆற்றல்களுக்கு எதிரான சவால்களினூடு பொறுப்பும் அறிவின் முதிர்ச்சி நிலையும் கண்ட ஒருவனாக உருவாகுவதை எடுத்தியம்புகிறது. மேலும் இதுவே உலகின் முதலாவது ‘டைனோசர்’ கதையுமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45393).