கமல் பெரேரா (சிங்கள மூலம்), மடுளுகிரியே விஜேரத்ன (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
xiv, 15-148 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-3926-2.
கமல் பெரேரா சிங்களமொழியில் எழுதிய ‘ரன் நெலும் பொக்குண’ என்ற இளைஞர் இலக்கிய நாவலின் தமிழாக்கம் இதுவாகும். தமிழ்-சிங்கள எழுத்தாளர்களிடையே உறவுப்பாலத்தை அமைத்துவரும் கமல் பெரேரா மக்கள் வங்கியின் உத்தியோகத்தராகப் பணியாற்றி இளைப்பாறியவர். ஓய்வின் பின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். ராவய பத்திரிகை மூலமாகத் தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி ‘ரைய பகன் நொவி” (துயில் கொள்ளா இரவு) என்ற பெயரில் 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. 1985இலிருந்து இன்றுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும் நான்கு சமூக நாவல்களையும் இளையோர் இலக்கியத்துக்கான நூல்களையும் எழுதிவந்துள்ளார். இவரது ரன் நெலும் பொக்குண 2005இல் இலங்கை அரச சாஹித்திய விழாவில் சிறநத நூலுக்கான விருதினைப் பெற்றது.