சிட்னி மாகஸ் டயஸ் (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, 2014. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிரப்பிக்ஸ், 51 A/1, கலஹிடியாவ).
64 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1848-78-1. (நூலின் பின்னட்டையில் காணப்படும் கோட்டுரு இலக்கம் ISBN: 978-955-1848-75-0.)
பிள்ளைகளின் மனங்களில் சுற்றுச் சூழல்சார் நீதிக்கானஆர்வத்தையும், அறிவுசார் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும் மூல நூலாசிரியரின் ஆக்கத்திறன் அழகானது. இயற்கையோடு இயைந்த வாழ்வே நிலைபேறான மேம்பாடாகும் என்பதை வலியுறுத்தும் சிறுவர் நாவல் இது. இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது. மனிதகுலத்தின் மேலாண்மைக்கு மாத்திரம் உட்பட்டதல்ல என்பதை இக்கதை வலியுறுத்துகின்றது. இலங்கையின் குடியேற்றத் திட்டங்களில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான போராட்டம் தொடர்பாக கவலைமிகுந்த செய்திகளைப் பார்த்தும் கேட்டும் வாசித்தும் வருகிறோம். இவ்வகையான மோதல் மனிதன் சுற்றாடலோடு மேற்கொள்ளும் தவறான கொடுக்கல்-வாங்கல்களின் விளைவாகும். இதனால் மனிதன் மாத்திரமல்ல, மிருகங்களும் கஷ்டங்களுக்குள்ளாகின்றன. ராஜயானை வனம் பிள்ளைகளுக்கு யானை-மனிதன் மோதல் தொடர்பாக சுவையான கதையொன்றினை முன்வைக்கின்றது. சுற்றாடல், சகவாழ்வு தொடர்பாக எமது முன்னோர் மேற்கொண்டுவந்த விலைமதிப்பற்ற நன்மைகளையும் ஞாபகமூட்டுகின்றது. அந்த அறிவும் அதன்மூலம் எற்படுத்திக்கொள்ளும் உணர்வும், உறுதியான சுற்றாடல் ஒன்றைக் கட்டியெழுப்பி அதன்மூலம் சகவாழ்வை மேற்கொள்ள அவசியமான அறிவை சிறார்களுக்கு வழங்கமுனைகின்றது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14212).