எச்.ரைடர் ஹக்கார்ட் (ஆங்கில மூலம்), ஸீ.எம்.ஏ.அமீன் (தமிழாக்கம்). கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ், 262 A, கண்டிவீதி).
viii, 232 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-51014-0-0.
புகழ்பெற்ற விக்ரோரிய அரசியின் காலத்து ஆங்கில நாவலாசிரியரான H.Rider Haggard (1837-1901) எழுதிய King Solomon’s Mines என்ற புதையல் வேட்டை பற்றிய சாகசக் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்நாவல் இதே தலைப்பில் 1985இல் ஆங்கிலத் திரைப்படமாகவும் வெளிவந்தது. ஸூலைமானின் புதையலைத் தேடி இரு வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் மர்மமான உள்ளகப் பகுதிக்குச் சென்ற ஜோர்ஜ் திரும்பி வரவில்லை. அவரது சகோதரரான ஹென்றி கேர்ட்டிஸ் இரு வெள்ளையர்களோடும் உம்பொபா என்ற ஜுலு இனஆப்பிரிக்கரோடும் ஜோர்ஜைத் தேடிச் செல்கிறார். அவர்களது பாதையிலே உயிர்குடிக்கும் பாலைவனமும், உறையவைக்கும் உறைபனி மூடிய மலைகளும் குறுக்கிடுகின்றன. சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கும் அவர்கள், கொடூரமான மன்னன் தவலாவை மட்டுமன்றி, வஞ்சனையும் சூழ்ச்சியும் படைத்த மந்திரக்காரி ககூலையும் எதிர்கொள்கின்றார்கள். ஸூலைமானின் புதையல் என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கின்றதா? அவர்கள் அதனைக் கண்டுபிடித்தார்களா? காணாமற்போன ஜோர்ஜ் அகப்பட்டாரா? என்ற கேள்விகளுக்கு விடையை நாவல் தருகின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 134649).
ஸூலைமான் அரசரின் வைரச் சுரங்கம்.
எச்.ரைடர் ஹக்கார்ட் (ஆங்கில மூலம்), ஸீ.எம்.ஏ.அமீன் (தமிழாக்கம்). கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 2வது (சுருக்கிய) பதிப்பு, டிசம்பர் 2013, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கொலன்னாவ: விங்ஸ் கிராப்பிக்ஸ், 2, பிரிவென வீதி).
iv, 130 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-51014-7-9.
2008இல் வெளியான முன்னைய பதிப்பின் சுருக்கிய வடிவம் இது. விலையிலும் உள்ளடக்கத்திலும் சிறிய மாற்றம் கண்டுள்ளது. தேவையற்ற விபரங்கள், வர்ணணைகள் நீக்கப்பட்டு இச்சுருக்கப் பதிப்பு மேலதிக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஹென்றி கோர்டிஸைச் சந்தித்தேன், ஸூலைமானின் வைரச் சுரங்கம் பற்றிய கதை, ஊழியனாக வந்த உம்போபா, யானை வேட்டை, பாலைவனத்தினூடே பயணம், தண்ணீர் தண்ணீர், ஸ}லைமானின் பாதை, குகுவானாலாந்தினுள் பிரவேசம், அரசன் துவலா, சூனிய வேட்டை, நாங்கள் காட்டிய அத்தாட்சி, போருக்கு முன், தாக்குதல், கிரெய்ஸ் படைப்பிரிவின் அயராத இறுதி எதிர்ப்பு, சுகவீனமுற்ற குட், இறந்தோர் புகலிடம், ஸ{லைமானின் புதையல் அறை, நம்பிக்கை இழந்தோம், இன்னோஸியின் பிரியாவிடை, கண்டுபிடித்தோம் ஆகிய அத்தியாயங்களில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 238064).