கவிரத்ன விநாயகசர்மா (சம்ஸ்கிருத மூலம்), லோரன்ஸ் மோர்கன் (ஆங்கில மொழியாக்கம்), ஈழத்துப் பூராடனார் (ஆங்கில வழித் தமிழாக்கம்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஆடி 2000. (கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9).
80 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: கனேடிய டொலர் 5., அளவு: 21×14 சமீ.
ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்) அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ள வடமொழிச் செய்யுள் இலக்கியம் இது. சகரனின் உற்பத்திக் காதை (சகரனின் ஆட்சி நலம்/நாட்டின் நல்லமைப்பு), நிலமடந்தை அவதாரம் (சூரியப்பொறி சுழலும் பூமியானது/இரவு பகல் காணும் இருபக்கப் பார்/பார் மடந்தையின் பருவ காலம்/மண்மகளின் ஆயுள்கள்/மண்மகளில் உயிரினம் தோன்றுதல்), மண்மகள் மமதைக் காதை (மண்மகளை அடக்க அமரர் முயல்தல்/அரன் அரிக்கு அனுமதி அளித்தல்/மாயன் செய்த மாயம்/இல்லறம் ஒறுத்த சகரனின் அரசு/சாகரனுக்கு நேர்ந்த விதி/மன்மதன் செய்த சதிஃசாகரனுக்கு மன்மதன் விடுத்த கணை/அமரர் அரசனிடம் குறையிரத்தல்/அரன் தன்னால் இயலாதென்று கைவிரித்தல்/அமரர் அரியிடம் சென்று முறையிடுதல்/அரி ஆவன செய்யப் பொருந்துதல்/உலகின் உபத்திரவம் பற்றி உரைத்தல்/அரி அமரர்க்கு அபயம் தருதல்/அரி அரனிடம் செல்லல் … இன்னும் பிற), உபதேசப் பகுதி (உலகளந்த மாயா உபதேசம் செய்வாய்/ திருமால் சொன்ன கலவி நீதி/ மளித மனங்கள் மாறும்/ கலவியினால் உலகு நிலைக்கும்/உலகில் உள்ள உயிரினமும் கலவிக் காலங்களும்/குருதிச் சூடும் உணர்ச்சிப் பெருக்கமும்/தெய்வங்களும் வணக்க நியமமும்/ துறவறத்தின் இலக்கணம்/காமத்தை வெறுத்தலுக்கு காரணம் உண்டோ?/உடற்கோளாறு துறவறமா/ மனக்கோளாறும் துறவறமா… இன்னும் பிற) ஆகிய நான்கு பாகங்களில் இவ்விலக்கியம் ஆக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19997).