வ.கணபதிப்பிள்ளை (மொழிபெயர்ப்பாளர்). தமிழ்நாடு: சே.வெ.ஜம்புலிங்கம், திருமயிலை, 2வது பதிப்பு, 1928, 1வது பதிப்பு, 1875. (சென்னை: சாது அச்சுக்கூடம்).
viii, 31 பக்கம், விலை: 3 அணா, அளவு: 18×12 சமீ.
வில்ஹணீயம் அல்லது வில்ஹண சரித்திரமென்னும்; சம்ஸ்கிருத நூல் காசுமீர தேசத்தில் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்ஹண கவியினால் தனது விருத்தாந்தத்தைக்; கூறும் வகையில் இயற்றப்பட்டது. இதன் சுலோகங்கள் பெரும்பாலும் அலங்கார ரசம் பொருந்தியவை. 1875களில் சென்னையில்; இயங்கிய திராவிட வர்த்தன சபையின் வேண்டுகோளின்பேரில் புலோலியூர் குமாரசுவாமிப் புலவரின் தமையனாரான யாழ்ப்பாணத்துப் புலோலி மகா வித்துவான் வ.கணபதிப்பிள்ளை அவர்கள் இதனைத் தமழில் மொழிபெயர்த்து 1875இல் அச்சிட்டிருந்தார். இவ்விரண்டாம் பதிப்பு மூலநூலின் வசனநடையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு சே.வெ.ஜம்புலிங்கம் அவர்களால் மகா வித்துவான் வ.கணபதிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. மகா வித்துவான் வ.கணபதிப்பிள்ளை நீணடகாலம் காஞ்சீபுரத்தில் பச்சையப்ப வித்தியாசாலைத் தமிழ்ப் பண்டிதராக விளங்கியவர். அதன் பின்னர் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரிப் பிரதம தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு பணியாற்றிய வேளையில் 1895 நவம்பர் மாதம் ஏகாதசித் தினத்திலே மரணமடைந்தார். தனது வாழ்நாட் காலத்தில் வில்ஹணீயம் மாத்திரமன்றி இரகுவமிசச் சுருக்கம், வாதபுரேசர் சரிதை, இந்திரசேனை நாடகம், இரகுவமிச நேர் மொழிபெயர்ப்பு, மார்க்கண்டேய புராணம் ஆகிய வடமொழி நூல்களையும் மொழிபெயர்த்துப் பிரசுரித்திருந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pamphlet 782).