11531 கோவலனார் கதை.

மா.சே.செல்லையா. பருத்தித்துறை: தென் புலோலியூர் மா.சே.செல்லையா, புலோலி தெற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1962. (பருத்தித்துறை: கலாபவன அச்சகம், வியாபாரி மூலை).

vii, 297 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

யாழ்ப்பாணத்துப் புலோலியூர் மந்திகை கண்ணகையம்மன் கோயிலில் வருடந்தோறும் வைகாசி மாதத்திற் பாராயணஞ் செய்யப்பட்டுவரும் கோவலனார் கதை. இது தென்புலோலியூர் மா.சே.செல்லையா அவர்களால் பல ஏட்டுப் பிரதிகளை ஒப்புநோக்கிச் சில திருத்தங்கள் செய்து அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. கோவலர் கண்ணகையம்மன் வரலாறு, தூரி ஓட்டம், கடலோட்டுக் கதை (வெடியரசன் போர்), நீலகேசரி புலம்பல், வீரநாரணதேவன் போர், விளங்குதேவன் போர், மணமாலை, அரங்கேற்றுக்கதை, கோவலரைப் பொன்னுக்கு மறித்த கதை, சிலம்பு கூறல், உயிர் மீட்சிக் கதை, வழக்குரை-மதுரை தகனம், குளிர்ச்சி ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10755).

ஏனைய பதிவுகள்