அ.குமாரசுவாமிப் புலவர் (மொழிபெயர்ப்பு). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம். 6வது பதிப்பு, பெப்ரவரி 1949. 1வது பதிப்பு, ஜனவரி 1922, 2வது பதிப்பு, மே 1931, 3வது பதிப்பு, 1932, 4வது பதிப்பு, ஜனவரி 1933, 5ஆவது பதிப்பு, ஜனவரி 1940. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
iv, 64 பக்கம், விலை: சதம் 60., அளவு: 18×12.5 சமீ.
இராமபிரானின் சரித்திரத்தைக் கூறும் சிறு நுல்களில் வடமொழியில் வெளிவந்த இராமோதந்தம் முக்கியமானதாகும். இலகுவும் சுருக்கமும் கொண்ட நூலாதலால் வடமொழி பயிலும் மாணவர்களின் முதற் பாடநூலாகவும் இது பயிலப்பட்டுவந்துள்ளது. இராம + உதந்தம் = இராமோதந்தம். உதந்தம் என்பது சரித்திரத்தைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10705).