வ.நடராஜன். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 2வது பதிப்பு, மே 1953, 1வது பதிப்பு, ஜனவரி 1951. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
viii, 124 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.10, அளவு: 18×12.5 சமீ.
இரண்டு பகுதிகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதற் பகுதியில் தமிழின் பெருமை, அரச நீதி, மக்களைப் பெறுதல், புலவரும் வறுமையும், தமயந்தி சுயம்வரம், பாஞ்சாலி சபதம், ஈழமண்டலச் சிறப்பு, முயல் யானையை வென்றமை, வீரப்போர், அன்னதானம், இலவுகாத்த கிளி, பாரி, உண்மையின் உயர்வு, புத்தரும் மகனிழந்த தாயும், மலைக்காட்சி, நீதிச் செய்யுள்கள் என்று 18 செய்யுட் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதி வசனபாடப் பகுதியாகும். இதில் பொய்ம்மை (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்), ஓநாயும் வீட்டுநாயும் (ஸ்ரீ ச.சுப்பிரமணிய பாரதியார்), நான் செத்த பிறகு (நாமக்கல்.வெ.இராமலிங்கம் பிள்ளை), கொலம்பசும் இந்தியாவும் (எஸ்.சபரிராஜா), நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய வரலாறு, கௌதமர் அகலிகையை மணந்தாரா?, பொய்யோ? மெய்யோ (பாரதியார்), சிறுமியின் பயங்கர நினைவு (ஹீரோஷிமாவில் நடந்த அணுக்குண்டுப் பிரயோகம் (சர்வோதயம்), அழகை அநுபவியுங்கள் (நேருஜி) ஆகிய ஆக்கங்கள் இப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4101).