11537 கம்பர் கவிதைக் கோவை: முதலாம் பாகம்.

அ.சே.சுந்தரராஜன் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், கல்லூரி அகம், இராமநாதன் கல்லூரி, 2வது பதிப்பு, ஜனவரி 1953, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1950. (தமிழ்நாடு: சாரதாவிலாச பிரஸ், கரிக்காரத் தெரு, கும்பகோணம்).

viii+xvi, (4), 204 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 21.5×14 சமீ.

கம்பராமாயணத்தின் சாரமாக வெளிவந்த நூல். கம்பராமாயணத்திலிருந்து மாணவர் விரும்பிப் படித்து இன்புறத்தக்க சில செய்யுட்பகுதிகளைத் தெரிவுசெய்து, அந்தச் செய்யுட்பகுதிகளையும் அவற்றிற்கான குறிப்புரைகளையும் இணத்து வெளிவந்தது. பால காண்டம் (சரயு நதி, கோசல நாடு, அயோத்திமாநகரம், தயரதனும் விசுவாமித்திர முனிவனும், மூவருஞ் சென்ற கடுஞ்சுரம், தாடகை வதம், மிதிலையிற் பிராட்டியைக் கண்டமை, சீதா பிராட்டியை அந்திமாலை முதலியன நலிவுறுத்தமை, சூரியோதய வருணனை, முனிவன் குமாரர் வரலாறு கூறல், இராமபிரான் வில்லிறுத்தமை, இராமபிரான் உலாவியல், சீதாபிராட்டி மணிமண்டபமடைதல்), அயோத்தியா காண்டம் (தயரதனிடம் கைகேயி வரங்கொண்டமை, கைகேயியினிடம் இராமபிரான் விடைகொண்டமை, கோசலையின் துயரம், சுமித்திரை இலக்குவற்குக் கூறிய வாய்மொழி, பிராட்டி வனஞ்செல எழுதல், மூவரும் மருதவைப்பைக் கடந்து செல்லுதல், இராமபிரான் குகனோடு தோழமை கொண்டது, இராமபிரான் பிராட்டிக்குச் சித்திரகூட மலைவளங் காட்டுதல், பரதனும் குகனும் சந்தித்தமை, குகன் அன்னையரைக் காணுதல், இராமபிரான் தயரதன் இறந்தது கேட்டுப் புலம்பல்), ஆரணிய காண்டம் (கோதாவரிக் காட்சி, சூர்ப்பநகை இராமபிரானைச் சந்தித்தல், சூர்ப்பநகை புலம்பல், சூர்ப்பநகை மீண்டும் இராமபிரானைக் கண்டு பேசுதல், கரன் வதம், சூர்ப்பநகை இராவணனிடம் முறையிடுதல், இரவர் கண்ட உருவெளித் தோற்றம், மாரீசன் அரக்கர்கோனுக்கு  நன்மதி கூறியது) ஆகிய முதல் மூன்று காண்டங்களின் தேர்ந்த செய்யுள்களும் விளக்கமும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் யாழ். பரமேஸ்வரா கல்லூரித் தலைவர் சு.நடேசபிள்ளை அவர்களின் முன்னுரையுடன் கூடியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44551, 0299).

ஏனைய பதிவுகள்

15628 அவங்க பேசமாட்டாங்க (நாடகங்கள்).

ரொஹான் பெணாட். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (6), 55 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா