11538 கம்பர் கவிதைக் கோவை: மூன்றாம் பாகம் (யுத்தகாண்டம்).

அ.சே.சுந்தரராஜன் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், கல்லூரி அகம், இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, 1952. (தமிழ்நாடு: சாரதாவிலாச பிரஸ், கரிக்காரத் தெரு, கும்பகோணம்).

x, 236 பக்கம், விலை: இந்திய ரூபா 2.50, அளவு: 21.5×14 சமீ.

கம்பராமாயணத்தின் சாரமாக வெளிவந்த நூல். கம்பராமாயணத்திலிருந்து மாணவர் விரும்பிப் படித்து இன்புறத்தக்க சில செய்யுட்பகுதிகளைத் தெரிவுசெய்து, அந்தச் செய்யுட்பகுதிகளையும் அவற்றிற்கான குறிப்புரைகளையும் இணத்து 1950இல் முதலாம் பாகம் வெளிவந்தது. முதல் மூன்று காண்டங்களின் தேர்ந்த செய்யுள்களும் விளக்கமும் அதில் இடம்பெற்றிருந்தன.  இரண்டாம் பாகத்தில் கிட்கிந்தா-சுந்தர காண்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நூல் இத்தொடரில் மூன்றாவது பாகமாகும். மாணவர் பயன்பாட்டிற்காக, யுத்தகாண்டச் செய்யுள்கள் இங்கு திரட்டித்தரப்பட்டுள்ளன. யாழ். பரமேஸ்வரா கல்லூரித் தலைவர் சு.நடேசபிள்ளை அவர்களின் முன்னுரையுடன் கூடியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12653).

ஏனைய பதிவுகள்

Enjoy Free Blackjack On line

Blogs No deposit Mobile Gambling enterprises and Incentives: What things to Understand Finest Four Most widely used Totally free Gambling games 2024 Internet casino No-deposit