11539 கம்பராமாயணம் பாலகாண்டம்: மிதிலைக் காட்சிப் படலம்.

சம்பந்தன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா வெளியீடு, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆனி 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).

(4), 136 பக்கம், விலை: ரூபா 3.90., அளவு: 21×13.5 சமீ.

மாணவர்களின் பயன்கருதி, எளிய நடையில் மிதிலைக் காட்சிப் படலம் எழுதப்பட்டுள்ளது. சனக மன்னனின் நாடு விதேக நாடு. அதன் தலைநகரான மிதிலையின் தோற்றத்தை இராம இலக்குவரும், விசுவாமித்திரனும் கண்ட வரலாறு கூறுவது இப்படலம். விசுவாமித்திரன் முதலான மூவரும் மிதிலை நகருள் பல காட்சிகளைக் காண்கிறார்கள். கன்னி மாடத்தில் நின்ற சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்கின்றனர். இராமனது நினைவால் சீதை உற்ற துன்பநிலை  –  அம் மூவரும் சனகன் எதிர்கொள்ளச் சென்று மாளிகையில் தங்குதல் – இராமனுக்குச் சதானந்தர் விசுவாமித்திரரின் வரலாறு கூறுதல்-கௌசிக முனிவன் தவம் செய்தல்-தேவர்கள் கௌசிகனைப் பிரம ரிஷியாக்குதல்-சீதையின் உரு வெளிப்பாடு கண்டு இராமன் கலங்குதல் – பின் அந்த இராமன் முனிவரோடும் தம்பியோடும் சனகனது வேள்விச் சாலையை அடைதல் – சனகன்  விசுவாமித்திரனை வினவல் – அவரும் விடையளித்தல் ஆகியன மிதிலைக் காட்சிப்படலத்தில் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10735).

ஏனைய பதிவுகள்

13071 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அருளிய நீதிவாக்கியங்கள்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2016.